கொஞ்சம் கார-சார-மான ரெசிபி. சாதாரண அவரைக்காய் பொரியலை விட இந்த செய்முறையில் அவரைக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு என் கணவர் சர்டிபிகேட் குடுத்தார்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
- கொஞ்சம் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டால் தக்காளி சுலபமாக வதங்கும்.
- அவரகாயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
- தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும். இப்போது எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
- ரசம் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தி - உடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment