இந்த பெயரை கேட்டாலே ஒரே குஜால்ஸ் தான். அவ்வளவு சுவையான ரெசிபி. நல்லா சூடா சாதம் வெச்சி உருளைகிழங்கு பொரியல்-ஐ தொட்டுகிட்டு சாப்பிட்டா.... இஷ்ஷ்ஷ்ஷ் அமிர்தம் தான் போங்க.
தேவையான பொருட்கள்:
- முதல்ல ரெசிபி நாயகன் பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்
- வெந்தயம் - ஒரு ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)
- தக்காளி - பெரியது ஒன்று
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- மல்லி தூள் - 1 ஸ்பூன்
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- உப்பு
செய்முறை
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.
- பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.
- தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
- இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
No comments:
Post a Comment