Wednesday, September 14, 2011
முருங்கை தொக்கு
Monday, September 12, 2011
சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை
Wednesday, September 7, 2011
வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி
- கடாயில் எண்ணெய் விட்டு, கடு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நீர் விட்டு நன்கு கூழ் ஆகும் வரை வதக்கவும்.
- சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும். பின் அணைத்து பொடி வகைகள் + உப்பு சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை.
- சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சமைக்கவும்.
Wednesday, May 11, 2011
ரவா புட்டு
- ரவை - ஒரு கப்
- தேங்காய் துருவல் - கால் கப்
- கிஸ்-மிஸ் பழம்+முந்திரி பருப்பு - கொஞ்சம்
- கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் (இதை முதல் வேலையாக செய்து வைத்து கொண்டு களத்தில் இறங்குங்கள் !)
- சீனி - அரை கப் (உங்கள் தேவைகேற்ப கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
- நெய் - 6 ஸ்பூன்
Monday, May 9, 2011
வெங்காய குழம்பு
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
- கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
- வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
- பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
- உப்பு
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
- வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
- தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
Thursday, May 5, 2011
புதினா சட்னி & புதினா சப்பாத்தி ரோல்
- உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
- கடலை பருப்பு - 2 ஸ்பூன்
- புதினா ஒரு கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்)
- பச்சை மிளகாய் - 5
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - 1 /4 கப்
- உப்பு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சீனி -அரை ஸ்பூன்
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- அதே கடாயில் உப்பு, சீனி, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- வதக்கிய புதினா ஆறியதும், தேங்காய் துருவல், உப்பு, வருத்த பருப்புகள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னி-யை அரை ஸ்பூன் சீனி சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். சீனி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும், அரைத்த பின் வதக்குவதால் 3 -4 நாள் பிரிட்ஜில் ஸ்டாக் வைத்து கொள்ளலாம் + சப்பாத்தியில் தடவும் போது சப்பாத்தி ரோல் நீர்த்து (ஒரு மாதிரி நீர் கோர்த்து அந்த இடத்தை சுற்றி கொஞ்சம் லூசாக இருக்கும்) போகாது.
Tuesday, April 26, 2011
தக்காளி சட்னி
- புதினா, மல்லி, கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உப்பு, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
- 2 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது தக்காளி நீர் விட்டு நன்றாக வதங்கும்.
- 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.
- ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுங்கள். கம கம தக்காளி சட்னி ரெடி.
Wednesday, April 20, 2011
பால் பாயசம் - செய்முறை(1 )
- பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
- 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
- பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
- 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
Thursday, April 14, 2011
Wednesday, April 13, 2011
பருப்பு உருண்டை குழம்பு
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
- இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
- குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
- உருண்டை வெந்ததும் (இதை செக் பண்ண ஒரு உருண்டையை எடுத்து அமுக்கி பாருங்க.அதுக்காக அமுக்கி அமுக்கி எல்லா உருண்டையையும் பிச்சுடாதீங்க!) அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
Saturday, April 9, 2011
Egg சப்பாத்தி ரோல்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
- பெரிய வெங்காயம் - 2 - பொடியாக அரிந்தது
- பச்சை மிளகாய் - 1
- முட்டை - 3
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
- கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.
- சப்பாத்தி
- லெமன் ஜூஸ்
- பொடியாக அரிந்த வெங்காயம்
Thursday, April 7, 2011
செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்
- துவரம் பருப்பு - அரை கப் (சூப் திக்கா இருக்க கூடாது). பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும்.
- காலிப்ளவர் - ஒரு கை அளவு (பொதுவா எந்த காயும் இதிலே சேர்க்க மாட்டாங்க. நான் கொஞ்சம் ஆர்வ கோளாறில் காலிப்ளவர் போட்டுருக்கேன்)
- பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது
- தக்காளி - 2 நீளமாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3 நீளமாக நறுக்கியது
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை
- உப்பு
- பிரஷர் குக்கர்-ரில் நெய் + எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- ஊற வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
- கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
Friday, April 1, 2011
பிரிஞ்சி சாதம் / Birinji Rice
- எண்ணெய் அல்லது நெய் - 4 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 2
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 6 (வேற எந்த கார சாமான்களும் சேர்க்க போவது இல்லை. எனவே உங்கள் கார அளவை பொருத்து கிராம்பு கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
- பட்டை - 1 பீஸ்
- அன்னாசி பூ, ஸ்டார் பிரிஞ்சி போன்றவையும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளுங்கள்
- அரிசி - ஒரு கப் (பாஸ்மதி / நார்மல் சாப்பாடு அரிசி எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்)
- தேங்காய் பால் - 2 1 /2 கப்
- 2 ஸ்பூன் பாலில் ஊற வைத்த 3 -4 இதழ் குங்கும பூ (அல்லது) 2 ஸ்பூன் நீரில் கரைத்த கால் ஸ்பூன் கேசரி பவுடர்
- நெய்யில் வருத்த முந்திரி பருப்பு & கிஸ்மிஸ் - கொஞ்சம்
- உப்பு
செய்முறை:
- அரிசியை கழுவி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். குக்கர்-ரில் எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் எண் 2 -7 -ல் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அரிசியை சேர்த்து, அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும் வரை வதக்கவும். தேங்காய்பால் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும். விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, விசில் வந்தால் ஒரு விசில் போதும்.
- பிரஷர் அடங்கியதும் குங்கும பூ/கேசரி பவுடர்-ஐ சாதம் நடுவில் மட்டும் ஊற்றவும். வருத்த முந்திரி & கிஸ்மிஸ்-ஐ மேலே கொட்டி மூடி விடவும். முடிந்தால் 1 நிமிடம் மிதமான தீயில் வைக்கலாம்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதத்தை நன்றாக கிளறிவிட்டு சூடாக பரிமாறுங்கள்.
குறிப்பு: தயிர் பச்சடி, சால்னா, காரமான சிக்கன் / காய்கறி கூட்டு இவற்றுடன் சுவையாக இருக்கும்.
Tuesday, March 29, 2011
பூண்டு புளி குழம்பு
- முதல்ல ரெசிபி நாயகன் பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்
- வெந்தயம் - ஒரு ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)
- தக்காளி - பெரியது ஒன்று
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- மல்லி தூள் - 1 ஸ்பூன்
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- உப்பு
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.
- பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.
- தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
- இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
Friday, March 25, 2011
இடியாப்பம் - முட்டை கறி
இந்த காம்பினேசன் எங்க செட்டியார் (என் கணவர்) கண்டுபிடிச்சது.
தேவையான பொருட்கள்
முட்டை - இரண்டு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை - தாளிக்க
பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
தக்காளி - இரண்டு பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்சம்
எலும்பிச்சை சாறு - 3 ஸ்பூன்
செய்முறை
1 . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
2 . வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்தால் தக்காளி சுலபமாக வதங்கும்.
3 . மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கிளறவும். 2 கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்றாக கொதிக்க விடவும். இப்போது முட்டை உடைத்து ஊற்றி விடலாம். முட்டை ஊற்றியபின் கொஞ்ச நேரம் கிளற வேண்டாம்.
4 . பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறவும். முட்டை கறி ரெடி !!!
குறிப்பு
முட்டை உடைத்து ஊற்றிய பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு குறைத்து விடவும்.
Friday, March 18, 2011
மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்
காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை
செய்முறை:
கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)
குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.
Thursday, March 17, 2011
வெஜ்ஜிடபில் சப்பாத்தி ரோல்
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 6
காரட் - 3
(காலிப்ளவர், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி போன்ற எளிதில் வேக கூடிய காய்கறிகளை உங்கள் வசதிக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்)
சோம்பு - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
(உங்களுக்கு சிக்கன் மசாலா, கரம் மசாலா பிடிக்கும் என்றால் ஒவ்வொன்றும் கால் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள் )
உப்பு, தண்ணீர் , எண்ணெய் தேவைகேற்ப
செய்முறை:
1 . காய்கறிகளை கழுவி பொடியாக அறிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2 . அடிபிடிக்காத பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பை அதில் சேர்க்கவும் .
3 . சோம்பு பொரிந்ததும் (எந்த ரி -ன்னு தெரியல கொஞ்சம் அஜீஸ் பண்ணிகோங்க. தெரிஞ்சவங்க எனக்கு கமெண்ட்-ல சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்) , நறுக்கிய காய்களை போட்டு லேசாக வதக்கவும். இப்போது எல்லா பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
4 . தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.
சப்பாத்தி (கோதுமை அல்லது மைதா மாவில் செய்தது)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
துருவிய காரட் - ஒன்று
எலும்பிச்சை சாறு - இரண்டு ஸ்பூன்
1 . சப்பாத்தியின் நடுவில் சமைத்த காய்கறிகளை வைத்து, அதன் மேல் வெங்காயம், காரட், கால் ஸ்பூன் எலும்பிச்சை சாறு (ஒரு சப்பாத்திக்கு இந்த அளவு )தூவி , படத்தில் உள்ளது போல் ரோல் செய்து சூடாக பரிமாறலாம்.
Sunday, February 13, 2011
அவரைக்காய் கூட்டு
கொஞ்சம் கார-சார-மான ரெசிபி. சாதாரண அவரைக்காய் பொரியலை விட இந்த செய்முறையில் அவரைக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு என் கணவர் சர்டிபிகேட் குடுத்தார்.
தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
- கொஞ்சம் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டால் தக்காளி சுலபமாக வதங்கும்.
- அவரகாயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
- தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும். இப்போது எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
- ரசம் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தி - உடன் பரிமாறலாம்.
Friday, February 11, 2011
பீன்ஸ் பருப்பு மசியல்
இது ஒரு மிக சுலபமான ரெசிபி. சப்பாத்தி, சாதம் இரண்டிற்கும் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - கொஞ்சம் (நறுக்கியது )
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க :
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு , கருவேப்பில்லை - கொஞ்சம்
செய்முறை:
- கொஞ்சம் எண்ணெய் விட்டு பீன்சை லேசாக வதக்கவும் (பச்சை வாடை போவதற்கு)
- பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் & மிளகாய் தூள், உப்பு, புளி + இரண்டு கப் தண்ணீர் , அனைத்தையும் பீன்சொடு சேர்க்கவும் . தக்காளி , மிளகாய் எல்லாம் நறுக்கனும்னு அவசியம் இல்ல. (காய், பருப்பை எல்லாம் கொஞ்சம் கழுவிட்டு போடுங்கப்பா !)
- நாலு இல்ல ஐந்து விசில் குக்கரில் வைக்கவும் (2-3 விசில் கூட போயிட்டாலும் பரவா இல்லை )
- குக்கர் விசில் அடங்கியதும் மூடிய திறந்து லைட்டா கடையனும்.
- கடைசியா மேல தாளிச்சு கொட்ட வேண்டியது தான்.
குறிப்பு:
- காய் எதுவும் போடாம, வெறும் பருப்பு கடைந்தலும் சுவையா இருக்கும்.
- பீன்ஸ்-கு பதிலா சவ்-சவ், முட்டைகோஸ் , புடலங்காய் சேத்துக்கலாம்.