எப்போ பாத்தாலும் இட்லி - சட்னி, தோசை - சட்னி சாபிட்டு போர் அடிக்குது. ஒரு சேஞ்ச்-க்கு புதினா சட்னி வெச்சு சப்பாத்தி ரோல் பண்ணலாம்னு ட்ரை செஞ்சேன். என் கணவருக்கும் இந்த காம்பினேசன் பிடித்திருந்தது (நம்மாளுக்கு சப்பாத்தின்னு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட சாபிட்டுருவாரு......... ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவருங்க.... அவ்வ்வ்வ்)
புதினா சட்னி:
புதுசா நான் இத உங்களுக்கு கற்று கொடுக்கணும்னு அவசியம் இல்ல, நிறைய பேர் இந்த ரெசிபி பதிவு செய்து இருகாங்க (அப்பாடா தப்பிச்சோம்டா சாமி-ன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது). ஆனாலும் என் செய்முறையை சுருக்கமா சொல்லலாம்னு நினைக்கிறன் (கொசு தொல்ல தாங்க முடியலப்பா.......)
தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
- கடலை பருப்பு - 2 ஸ்பூன்
- புதினா ஒரு கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்)
- பச்சை மிளகாய் - 5
- புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - 1 /4 கப்
- உப்பு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சீனி -அரை ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- அதே கடாயில் உப்பு, சீனி, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- வதக்கிய புதினா ஆறியதும், தேங்காய் துருவல், உப்பு, வருத்த பருப்புகள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னி-யை அரை ஸ்பூன் சீனி சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். சீனி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும், அரைத்த பின் வதக்குவதால் 3 -4 நாள் பிரிட்ஜில் ஸ்டாக் வைத்து கொள்ளலாம் + சப்பாத்தியில் தடவும் போது சப்பாத்தி ரோல் நீர்த்து (ஒரு மாதிரி நீர் கோர்த்து அந்த இடத்தை சுற்றி கொஞ்சம் லூசாக இருக்கும்) போகாது.
புதினா சப்பாத்தி ரோல்:
தேவையான பொருட்கள்:
புதினா சட்னி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
துருவிய காரட்
லெமன் ஜூஸ்
ரோல் செய்ய:
புதினா சட்னியை சப்பாத்தி நடுவில் தடவி, நறுக்கிய வெங்காயம், துருவிய காரட் ஸ்டப் செய்து, அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்யவும். சூடாக பரிமாறவும்.
