ரசம் சாதம் / சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ். என் அம்மாவிடம் இருந்து கற்றுகொண்ட குறிப்பு இது.
தேவையான பொருட்கள்:
முருங்கை - 2 (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்)\
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, சோம்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
தக்காளி - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு , மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு - கொஞ்சம்
அரைக்க:
தேங்காய் துருவல் / பல் - ஒரு கைப்பிடி
சோம்பு - அரை ஸ்பூன்
பூண்டு - 1
வறுத்த நிலக்கடலை - கொஞ்சம் (optional )
மிளகாய் வத்தல் - 2
(லேசாக நீர் விட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்)
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் வேக வைத்த முருங்கை, சாம்பார்
பொடி, உப்பு, இத்துடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தணலில் சமைக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை காயுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேகவிடவும்.
அடுப்பை அணைக்கும் முன் மல்லிதழை, எலுமிச்சை சாறு
சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
7 comments:
வாவ்...ரொம்ப அருமையாக இருக்கின்றது...கடைசியில் சேர்க்கும் பொருட்கள் சூப்பர்ப்....
சூப்பரா இருக்கு
வாவ் ! சூப்பர்.போட்டோவும் நச்சென்று இருக்கு.
சூப்பரா இருக்கு
Very interesting recipe, bookmarking this :)
murungai curry super.. kandippa try panren..!;)visit my blog!
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர்-காவியகவி
பார்வையிடமுகவரி-வலைச்சரம்
அறிமுகம் செய்த திகதி-25.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment