Showing posts with label சிம்பிள் சமையல். Show all posts
Showing posts with label சிம்பிள் சமையல். Show all posts

Thursday, September 13, 2012

குய்க் இனிப்பு பணியாரம்

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள்: 

ரவை - 1 1/2 கப் 
மைதா - 1/2 கப் 
சீனி (அ ) சக்கரை - 1/2 கப் (இது மிதமான அளவு, அதிகம் இனிப்பு விருப்பம் உள்ளவர்கள் அதற்கேற்ப இனிப்பை சேர்க்கவும்)
ஏலக்காய் பொடி -1 சிட்டிகை 
Baking சோடா - 1 சிட்டிகை  

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில், ரவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ரவையை ஊற வைத்து கொள்ளவும்.
2. பேகிங் சோடாவை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ரவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக பேகிங் சோடா சேர்த்து அதன் மேல் 2 ஸ்பூன் நீர் விட்டு பின் நன்கு கலந்து 2 நிமிடம் ஊற விடவும்.
3. பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி நெய் தடவி, கலந்த மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
Evening பலகாரம் ரெடி.

Monday, September 10, 2012

ஈசி வாழைக்காய் வறுவல் 

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/2 tbs 
மிளகாய் தூள் - 1tbs 
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tbs 
உப்பு தேவையான அளவு 

செய்முறை:

1. வாழைக்காயை காம்பு நீக்கி தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
2. உப்பு மற்றும் இதர பொருட்களை சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
3. தோசை கல்லை அடுப்பிலேற்றி, கல் காய்ந்ததும் சிறிது எண்ணை விட்டு ஊறிய வாழைக்காயை ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி எண்ணை விட்டு வறுத்தெடுக்கவும். 
4. பிடிக்கும் என்றால் கடைசியாக காய் சூடாக இருக்கும் போதே கொஞ்சம் எலுமிச்சைச்சாறு தெளித்து பரிமாறலாம்.



Monday, September 12, 2011

சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை



சப்பாத்தி/ வெரைட்டி ரைஸ்-க்கு  தொட்டு கொள்ள சீக்கிரமாய் சமைக்க கூடியது. வெங்காயம், தக்காளி எதுவும் நறுக்க தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் வெட்டினால் போதும்.

 
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - கால் கிலோ (உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி கொள்ளவும் )
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் : மல்லி தூள் (1 : 1 1 /2 ) (அல்லது) மிளகு தூள் - உங்கள் கார விருப்ப அளவை பொருத்து. நான் மிளகு தூள் சேர்த்துள்ளேன்.
உப்பு, மல்லி இலை - தேவைக்கேற்ப
தேங்காய் பவுடர் (optional ) - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதன் மேல் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அ) மிளகு தூள் , உப்பு சேர்த்து கிளறவும். தேவைபட்டால் கால் டம்ளர் நீர் விட்டு கிளறினால் உப்பு, காரம் சீராக இருக்கும்.

குறைந்த தணலில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். (உருளை கிழங்கை பெரிதாக நறுக்கி இருந்தால் வேக சற்று நேரம் பிடிக்கும்).
 

மல்லி தலை, தேங்காய் பவுடர் சேர்த்து இறக்கி விடலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...