கொஞ்சம் கார சாரமா சாப்பிடுற ஆளா நீங்க? அப்போ கண்டிப்பா உங்களுக்கு இந்த ரெசிபி பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
- கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
- வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
- பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
- உப்பு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
- வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
- தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.
ஒரு டவுட்: இந்த குழம்பை ரசம் மாதிரி தண்ணியா வெச்சு, வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்-ஆ யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கும்? சமீபத்தில், டிவியில் ஒரு பிரபல சமையல் நிபுணர் இந்த டிப்ஸ் கொடுத்தாங்க.


