Wednesday, April 13, 2011

பருப்பு உருண்டை குழம்பு


என்னுடைய favorite ரெசிபி. பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுதா......  
 
தேவையான பொருட்கள்:
நலெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 கை
பொடியாக நறுக்கிய தக்காளி - 4
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் , மிளகாய் தூள் - தலா 1  1 /2  ஸ்பூன்
உப்பு
மல்லி தழை - கொஞ்சம்
 
பருப்பு உருண்டை பிடிக்க:
15 நிமிடம் நீரில் ஊற வைத்த கடலை பருப்பு - 3 /4  கப்
பொடியாக அறிந்த வெங்காயம் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 /2  ஸ்பூன்
உப்பு
 
15 நிமிடம் கழித்து பருப்பு கழுவி நீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் விட தேவை இல்லை. மற்ற சாமான்களை பருப்புடன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
  • இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
  • குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
  • உருண்டை வெந்ததும் (இதை செக் பண்ண ஒரு உருண்டையை எடுத்து அமுக்கி பாருங்க.அதுக்காக அமுக்கி அமுக்கி எல்லா உருண்டையையும் பிச்சுடாதீங்க!) அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
டிப்ஸ் டிப்ஸ்: பருப்பை அரைத்த மிக்சி, உங்கள் கை இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரை குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் குழம்பு கெட்டியா, வாசனையா இருக்கும்.


2 comments:

Mahi said...

உருண்டை குழம்பு நல்லா இருக்குங்க.நான் மசாலா அரைச்சு சேர்ப்பேன்,உங்க செய்முறை சிம்பிளா இருக்கு,செய்துபார்க்கிறேன்.நன்றி!

இமா க்றிஸ் said...

//பருப்பை அரைத்த மிக்சி, உங்கள் கை இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில் கழுவி// ;)))

Related Posts Plugin for WordPress, Blogger...