Thursday, May 5, 2011

புதினா சட்னி & புதினா சப்பாத்தி ரோல்

எப்போ பாத்தாலும் இட்லி - சட்னி, தோசை - சட்னி சாபிட்டு போர் அடிக்குது. ஒரு சேஞ்ச்-க்கு புதினா சட்னி வெச்சு சப்பாத்தி ரோல்  பண்ணலாம்னு ட்ரை செஞ்சேன். என் கணவருக்கும் இந்த காம்பினேசன் பிடித்திருந்தது (நம்மாளுக்கு சப்பாத்தின்னு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட சாபிட்டுருவாரு......... ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவருங்க.... அவ்வ்வ்வ்)


புதினா சட்னி:
 
புதுசா நான் இத உங்களுக்கு கற்று கொடுக்கணும்னு அவசியம் இல்ல, நிறைய பேர் இந்த ரெசிபி பதிவு செய்து இருகாங்க (அப்பாடா  தப்பிச்சோம்டா  சாமி-ன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது). ஆனாலும் என் செய்முறையை சுருக்கமா சொல்லலாம்னு நினைக்கிறன் (கொசு தொல்ல தாங்க முடியலப்பா.......)
 
தேவையான பொருட்கள்:
  1. உளுத்தம் பருப்பு - 4  ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2  ஸ்பூன்
  3. புதினா ஒரு கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரில் கழுவி  சுத்தம் செய்து கொள்ளவும்)
  4. பச்சை மிளகாய் - 5
  5. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  6. பூண்டு - 4  பல்
  7. இஞ்சி - சிறிய துண்டு
  8. தேங்காய் துருவல் - 1 /4 கப்
  9. உப்பு
  10. எண்ணெய் - 2  ஸ்பூன்
  11. சீனி -அரை ஸ்பூன்
 செய்முறை:
  • கடாயில் 2  ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் பொன்னிறமாக  வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • அதே கடாயில் உப்பு, சீனி, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • வதக்கிய புதினா ஆறியதும், தேங்காய் துருவல், உப்பு, வருத்த பருப்புகள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  • கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னி-யை அரை ஸ்பூன் சீனி சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். சீனி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும், அரைத்த பின் வதக்குவதால் 3 -4  நாள் பிரிட்ஜில் ஸ்டாக் வைத்து கொள்ளலாம் + சப்பாத்தியில் தடவும் போது சப்பாத்தி ரோல் நீர்த்து (ஒரு மாதிரி நீர் கோர்த்து அந்த இடத்தை சுற்றி கொஞ்சம் லூசாக இருக்கும்)  போகாது.


புதினா சப்பாத்தி ரோல்:
 
தேவையான பொருட்கள்:
புதினா சட்னி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
துருவிய காரட்
லெமன் ஜூஸ்
 
ரோல் செய்ய:
புதினா சட்னியை சப்பாத்தி நடுவில் தடவி, நறுக்கிய வெங்காயம், துருவிய காரட் ஸ்டப் செய்து, அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்யவும். சூடாக பரிமாறவும். 

13 comments:

Menaga Sathia said...

புதினா சட்னியில் ரோல் செய்திருப்பது நல்லாயிருக்குங்க..

Reva said...

Chutney arumai ... supera irukku unga blog:)

ChitraKrishna said...

மிக்க நன்றி மேனகா.
மிக்க நன்றி ரேவதி. உங்க ப்ளாக்கும் சூப்பரா இருக்கு.

Jayanthy Kumaran said...

innovative n healthy idea...nice presentation chitra..
first time here...love your space..interesting posts with great clicks..
Am your new follower now..:)
do stop by mine sometime..
Tasty Appetite

Mahi said...

ஆச்சி,செட்டியார ஓட்டறதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க. இப்பூடி அநியாயம் பண்ணக்கூடாது! அவர் இதெல்லாம் படிக்கமாட்டாரோ?அதான் இப்படி போட்டுத்தாக்கறீங்க!?! :)

சப்பாத்தி ரோல் பண்ணறதுக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம்.எப்பவாவது என்னவர் லன்ச் பாக்ஸுக்கு ரோல் பண்ணி தருவேன்.மத்தபடி சட்னி தனியா,சப்பாத்தி தனியாதான் இருக்கும்!

Jaleela Kamal said...

சீனிக்கு பதில் பேரிச்சம் பழம் சேருங்க சூப்பரா இருக்கும்.

ChitraKrishna said...

மகி, என் ப்ளாகோட PRO, first critic எல்லாமே என் கணவர் தான். ஓட்டல மகி, சப்பாத்தி மேல் என் கணவருக்கு இருக்கும் கொள்ளை பிரியத்தையும், நான் எப்படி சமைத்தாலும் அதை அஜஸ் செய்து கொள்ளுவதையும் தான் அப்டி சொல்லி இருக்கேன் :) (ஸ்ஸ்ஸ்....... அப்பா. இப்போவே கண்ண கட்டுதே! ஓரளவுக்கு சமாளிசுட்டேன்னு நெனைக்கிறேன்!).

ChitraKrishna said...

மகி,
இப்டியெல்லாம் குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ண கூடாது. சமத்து பொண்ணா இருக்கனும்.

ChitraKrishna said...

Warm Welcome to my space Jay. Thanks for ur comments. Jay, ur blog looks interesting... Look at ur followers list.

ChitraKrishna said...

உங்கள் வருகைக்கும், டிப்ஸ்க்கும் மிக்க நன்றி ஜலீலா.

Asiya Omar said...

புதினா சட்னி,புதினா சப்பாத்தி விளக்கம் பிரமாதம்,அசத்திட்டே சித்ரா..

Anonymous said...

ஹஹ்ஹா!! அந்த பயம் எப்பவுமே இருக்கோணும்,சரீங்களா?

நான் எப்பவுமே சமத்துதான்! ;)
-மகி

ChitraKrishna said...

Warm welcome to my blog. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியாக்கா.

Related Posts Plugin for WordPress, Blogger...