Monday, May 9, 2011

வெங்காய குழம்பு

கொஞ்சம் கார சாரமா சாப்பிடுற ஆளா நீங்க? அப்போ கண்டிப்பா உங்களுக்கு இந்த ரெசிபி பிடிக்கும்.


 தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
  2. கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
  3. வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
  4. பெரிய வெங்காயம் - 2  பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  7. புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
  8. உப்பு
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.

ஒரு டவுட்:  இந்த குழம்பை ரசம் மாதிரி தண்ணியா வெச்சு, வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்-ஆ யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கும்? சமீபத்தில், டிவியில் ஒரு பிரபல சமையல் நிபுணர் இந்த டிப்ஸ் கொடுத்தாங்க.

16 comments:

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Chitra said...

tats looking spicy as u said. bookmarked !!

AMMU MOHAN said...

காரமா?தென் இந்தியர்கள் எங்க போனாலும் எது இல்லேனாலும் இருந்துடுவாங்க..கார சாரமான சாப்பாடு கிடைக்காட்டி தவிசிடுவாங்க..உங்க வெங்காய குழம்பு சூப்பர்..ட்ரை பண்றேன்..

Suganya said...

Hi First time in ur place.... U have a excellent set of recipes.... Very traditional ones... YUM!

Nandinis food said...

Miga arumaiyana kozhumbhu! Superb with rice!

Reva said...

super recipe.... arumaiyaana kuzhambhu..:)
Reva

vanathy said...

looking delicious!

Jeyashris Kitchen said...

spicy and delicious gravy.makes me hungry

Raks said...

Sounds real spicy. Love to have it with rice,simple yet wonderful recipe!

Unknown said...

கார சாரமான வெங்காய குழம்பு சூப்பர்

Angel said...

எங்க அம்மா இப்படிதான் செய்வாங்க (எனக்கு அழ அழையா வருது )
டயடிங் இருக்கணும்னு நினச்சா கூட முடியல ஒரே temptation .
நான் எப்பவும் வெண்பொங்கலுக்கு கார குழம்போடு சாப்பிடுவேன் .looks yummy
shall try this recipe tomorrow ..thanks chitra.

ChitraKrishna said...

முதல் முறையாக வருகை தந்துள்ள குடந்தை அன்புமணி, சித்ரா செந்தில், சுகன்யா, ராஜேஸ்வரி, ஜெயஸ்ரீ, சிநேகிதி அனைவருக்கும் நல்வரவு. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

ChitraKrishna said...

அம்மு மோகன் நீங்க சொல்வது மிக சரி. கார சாரமான சாப்பாடு கிடைக்காம தவிச்ச அனுபவம் எனக்கு உண்டு. ட்ரை செய்துவிட்டு கண்டிப்பா உங்க கருத்தை சொல்லுங்க.

ChitraKrishna said...

நந்தினி, reva & வானதிக்கு என் நன்றிகள்.

ChitraKrishna said...

அப்பா! ஒரு வழியா வெண்பொங்கல் - வெங்காய குழம்பு காம்பினேசன் சாப்பிட்ட ஒரு ஆளை கண்டுபிடித்து விட்டேன். Angelin, நீங்க தான். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.


என்ன செய்வது Angelin, வயசு கூட கூட, அம்மா மீது உள்ள ஏக்கமும் அதிகம் ஆகிகிட்டேதான் இருக்கு. சின்ன பிள்ளைங்களா, அம்மா கையிலேயே இருந்திருக்கலாம் :(

Dave at eRecipeCards.com said...

Stunning photos.. I do hope you return to blogging.. and consider posting some of your back stock. I love your images of Indian food,

Related Posts Plugin for WordPress, Blogger...