Wednesday, May 11, 2011

ரவா புட்டு

புட்டு மேகர் இல்லாம குய்க்கா ஒரு புட்டு செய்து சாப்பிடலாம் வாங்க....

தேவையான பொருட்கள்:
  1. ரவை - ஒரு கப்
  2. தேங்காய் துருவல் - கால் கப்
  3. கிஸ்-மிஸ் பழம்+முந்திரி பருப்பு - கொஞ்சம்
  4. கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் (இதை முதல் வேலையாக செய்து வைத்து கொண்டு களத்தில் இறங்குங்கள் !)
  5. சீனி - அரை கப் (உங்கள் தேவைகேற்ப கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
  6. நெய் - 6 ஸ்பூன்
செய்முறை:
 ஒரு நாண்-ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி பருப்பு + கிஸ்-மிஸ் பழம் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி வைத்து கொள்ளுங்கள். 


அதே கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்கவும். ரவை வறுபட்டதும் கால் டம்ளர் கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். தண்ணீர் வற்றியதும் திரும்ப கால் டம்ளர் சுடுநீர் சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். இது போல் ரவை வேகும் வரை செய்யவும். தேவைபட்டால் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
கொதிக்க வைத்த மொத்த நீரையும் யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல, ரவை வெந்ததும் நிறுத்தி விடுங்கள்.  4  - 5 முறை நீர் சேர்த்து வதக்கியதுமே ரவை வெந்து விடும். இது சிம்பிள் தான்.

அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் துருவல், சீனி, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அவ்ளோதான் புட்டு ரெடி.
சூடா சாப்டாலும் சரி / ஆறியபின் சாப்பிட்டாலும் சரி, சுவையா இருக்கும்.
என் பொண்ணுக்கு இந்த இனிப்பு ரொம்ப பிடித்தது.  அவளால் அப்படியே சாப்பிட முடியாது (இப்போ தான் ஒரு வயதை நெருங்குகிறாள்), வெறும் ரவை போர்ஷனை மட்டும் சுவைத்து சாபிட்டா.... 

10 comments:

AMMU MOHAN said...

rava புட்டு புதுமையா இருக்கே.. செய்து பார்கிறேன் கண்டிப்பா..

Chitra said...

it's definetely a new dish for me...but looks very yummy will try it out for sure..thanks for a new recipe.

vanathy said...

சுப்பரா இருக்கு. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்..எனக்கும் என் பொண்ணுக்கும் ரொமப் பிடித்தது...

GEETHA ACHAL said...

ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று do-listயில் இருக்கின்றது...ரொம்ப அருமையாக இருக்கின்றது...

Mahi said...

புதுசா இருக்குங்க சித்ரா! ஸ்வீட்னா எனக்கு ரெம்பப்பிடிக்கும்,செய்து பார்க்கிறேன். ரெசிப்பிக்கு நன்றி!:)

Jayanthy Kumaran said...

omy goodness...how delicious does that look..;P
Tasty Appetite

AMMU MOHAN said...

BUNCH OF AWARDS WAITING FOR YOU..PLEASE COME TO MY BLOG AND ACCEPT IT..

ஆமினா said...

புதுவிதமா இருக்கு

வாழ்த்துக்கள்

Sanghi said...

idhu en maamiyar special.. i loved! super!

Related Posts Plugin for WordPress, Blogger...