Monday, September 10, 2012

ஈசி வாழைக்காய் வறுவல் 

Photobucket Pictures, Images and Photos

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/2 tbs 
மிளகாய் தூள் - 1tbs 
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tbs 
உப்பு தேவையான அளவு 

செய்முறை:

1. வாழைக்காயை காம்பு நீக்கி தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
2. உப்பு மற்றும் இதர பொருட்களை சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
3. தோசை கல்லை அடுப்பிலேற்றி, கல் காய்ந்ததும் சிறிது எண்ணை விட்டு ஊறிய வாழைக்காயை ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி எண்ணை விட்டு வறுத்தெடுக்கவும். 
4. பிடிக்கும் என்றால் கடைசியாக காய் சூடாக இருக்கும் போதே கொஞ்சம் எலுமிச்சைச்சாறு தெளித்து பரிமாறலாம்.



3 comments:

Angel said...

சித்ரா நலமா :))
ரொம்ப நாள் கழித்து உங்க போஸ்ட் பாக்கிறேன் ..
அருமையான டேஸ்டி வறுவல் .....பகிர்வுக்கு நன்றி

Prema said...

wow very tempting varuval,loved it...

இமா க்றிஸ் said...

yummy!

Related Posts Plugin for WordPress, Blogger...